இந்திய BSF வீரரை இப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்காளா? பாக். செய்த கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!!
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா அங்கு கொடுமைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது. இதனிடையே பஞ்சாப்பின் பெரோஸ்பூர் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிக்கினார். கடந்த மாதம் 23ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை வீரர் புர்னம் குமார் ஷா பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிக்கினார்.
பெரோஷ்பூர் செக்டாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது தவறுதலாக எல்லை தாண்டி சென்ற நிலையில் அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் 21 நாட்களுக்கு பிறகு நேற்று நம் நாட்டிடம் எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டார். பஞ்சாப்பில் அட்டாரி - வாகா எல்லை வழியாக அவர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் எல்லை பாதுகாப்பு படையில் 24வது பிஎஸ்எஃப் பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையின் ‛கிசான் கார்டு' பிரிவிலும் செயல்பட்டு வந்தார். ‛கிசான் கார்டு' என்பது எல்லையோர விவசாயிகளை பாதுகாக்கும் பிரிவாகும். தற்போது புர்னம் குமார் ஷா தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்த பாகிஸ்தான் அவரை சரியாக தூங்கவிடாமல் தொல்லை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: பாக். ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம்.. இதுதான் காரணம்; பென்டகன் வட்டாரம் தகவல்!!
மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை கடுமையாக திட்டி உள்ளனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தல் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி காலையில் பல் துலக்க கூட அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 3 இடங்களுக்கு மாற்றி மாற்றி அவரை அழைத்து சென்றுள்ளனர். அதில் ஒரு இடம் என்பது விமானப்படை தளத்தின் அருகே அமைந்து இருக்கிறது. கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும் கூட காதில் விமானங்களின் சத்தம் கேட்டுள்ளதால் அதனை அவர் உறுதியாக கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு இடத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சாதாரண உடை அணிந்து வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரிடம் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர், அதிகாரிகளின் பெயர் விபரங்களை கேட்டுள்ளார்.
செல்போன் எண்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் வழங்கவில்லை. பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்பதால் அவரிடம் செல்போனும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானியர்களால் செல்போன் எண்ணை எடுக்க முடியாமல் போனது. இந்தியா வந்தவுடன் புர்னம் குமார் ஷா தனது குடும்பத்தை சந்தித்தார். அதன்பிறகு அவரிடம் நம் அதிகாரிகள் விசாரித்தனர். அவரது சட்டையில் ஏதேனும் ஒட்டுகேட்கும் கருவிகள் இருக்கலாம் என்பதால் அதனை அகற்றி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு புர்னம் குமார் ஷாவிடம் அதிகாரிகள் விசாரித்தனர். புர்னம் குமார் ஷா நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெிரவித்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் உளவாளி கைது... விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!