×
 

பஞ்சாபில் கோர விபத்து: பேருந்தில் 40 பேர் பயணம்.. பரிதாபமாக போன 7 உயிர்கள்.. மற்றவர்களின் நிலை என்ன..?

பஞ்சாப் மாநிலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. சுமார் 40 பயணிகளுடன் புறப்பட்ட அந்த பேருந்து, தசுஹா-ஹாஜீபூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக சென்று எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த சுமார் 17க்கும் மேற்பட்டோரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிங்க: 'எங்கேயும் எப்போதும்' பட பாணியில் கோர விபத்து.. மோதிக்கொண்ட பேருந்துகள்.. 40 பேர் பரிதாப பலி..!

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த பேருந்தை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விபத்து நடந்த பகுதிக்கு சென்ற தசுஹா டிஎஸ்பி குல்விந்தர் சிங், மீட்புப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இதுவரை நடந்த விசாரணையில் காருக்கும் பேருந்துக்கும் இடையே விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறினார். மேலும் ஜேசிபி மற்றும் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணையில் வெளிவரும் புதிய உண்மைகளின் அடிப்படையில், வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  


 

இதையும் படிங்க: 'எங்கேயும் எப்போதும்' பட பாணியில் கோர விபத்து.. மோதிக்கொண்ட பேருந்துகள்.. 40 பேர் பரிதாப பலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share