×
 
☰

திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! - டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!

மதுராந்தகம், தாராபுரத்தில் இவிஎம் மெஷின்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக எதிர்பாராத அளவிற்கு முன்னிலை வகித்து வருகிறது

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதனால் இரண்டு தொகுதிகளிலும் முதல் சுற்றில் யார் முன்னிலை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனைத்து வாக்கு எண்ணிக்கை மேஜைகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் 14 மேஜைகள் மற்றும் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவியது. மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகமும், தாராபுரத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுகவும் முன்னிலை பெற்றிருந்தன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் முதல் சுற்று முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: #BREAKING அடேங்கப்பா... ஆரம்பமே அடித்து தூக்கிய தவெக... மதுராந்தகம், தாராபுரத்தில் இவ்வளவு லீடா?

தாராபுரத்தில் தடாலடி மாற்றம்: 

தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை நிலவரம் மாறி  வந்தது. முதலில் திமுக முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் சுற்று நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா  1,350 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 870  வாக்குகளையும், திமுக வேட்பாளர் சுகன்யா 643வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 9, நாதக வேட்பாளர் கார்த்திகா 6 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

இதனால் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அதிமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை நிலவரம் மாற வாய்ப்புள்ளது.

மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை!

மதுராந்தகம் தொகுதியின் ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 6,873 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4,872 வாக்குகளையும், திமுக வேட்பாளர் பரந்தாமன் 4,328 வாக்குகளையும், நாதக வேட்பாளர் ஜானகிராமன் 711 வாக்குகளையும், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தி 529 வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையிலும் ஆரம்பக்கட்ட வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை மாறி மாறி வந்துள்ளதால், இறுதி முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகளுக்குப் பிறகே இரண்டு தொகுதிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெளிவாகும்.

இதையும் படிங்க: #BREAKING தமிழ்நாடே எதிர்நோக்கும் முக்கிய முடிவுகள்... மதுராந்தகம், தாராபுரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share