பகீர் காட்சிகள்... ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 2 பேர் பலி...!
கேரளாவில் வேக வேகமாக நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் எதிரே வந்த கார் மீது மோதியதில் 2 பேர் பலியாகினர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்நங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நோயாளி உட்பட இருவர் பரிதாபமாக பலி ஐந்து பேர் படுகாயம் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கண்ணூரைச் மாவட்டத்தை சேர்ந்த குஞ்சிராமன் 81 என்பவர் வயது மூப்பு காரணமாக எர்ணாகுளத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து எர்ணாகுளத்தில் இருந்து கண்ணூர் நோக்கி ஆம்புலன்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் என்ற பகுதியில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டத.
இதில் ஆம்புலன்ஸில் இருந்த குஞ்சிராமன் காரில் பயணம் செய்த புஷ்பா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் காரில் இருந்த ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்தின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆம்புலன்சில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!
இதோ அந்த வீடியோ...
#car #ambulance accident in #Kerala's #thrissur pic.twitter.com/RuDpycj9Zg
— Karthick Chandrasekar (@kart997) August 11, 2025
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!