டெல்லியை அடுத்து தெலங்கானாவிலும் சதியா?... ரயில் நிலையம் அருகே நின்ற மர்ம கார்... சமீருக்கு வலைவீச்சு...!
கச்சிகூடா ரயில் நிலையம் அருகே சாலையின் குறுக்கே மர்ம நபர் காரை நிறுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சேகுடா ரயில் நிலையம் அருகே உள்ள சதர்காட்-கோல் கானா சுரங்கப்பாதையின் கீழ், ஒரு கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபரான டாக்டர் உமான் நபியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு காட ஹரியானாவின் கண்டவாலி கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: காஷ்மீர் டு டெல்லி... செங்கோட்டை அருகே வெடித்த காரின் பகீர் பிண்ணனி ...!
அதனைத் தொடர்ந்து, நேற்று ஹரியானாவில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத சந்தேக நபருடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகத்திற்கிடமான வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டது.
டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, ஐதராபாத், சைபராபாத் மற்றும் ரச்சகொண்டா பகுதிகளில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கச்சிகூடா ரயில் நிலையம் அருகே சாலையில் மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.
அதில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பது தெரிய வந்தது. அந்த கார் பாலாஜி பெயரில் பதிவு செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து அவரிடம் விசாரித்ததில் சமீர் என்பவர் அவரிடமிருந்து காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
போதையில் இருந்த சமீர் காரை சாலையின் குறுக்கே விட்டு சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை கார்களை வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்கள் யார் அவர்கள் பின்னனி என்ன என்பதை அறிந்து கொடுக்கவும் சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டு கொண்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த சமீரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா அமைச்சராகப் பதவியேற்ற அசாருதீன்.. இந்த தொகுதி ஒதுக்கீடா..!!