×
 

FASTag இல்லையா.. இனி NOT ALLOWED..!! சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் புரட்சி..!!

வரும் ஏப்ரல் 1 முதல், ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் கொடுத்து டோல் கேட்டை கடக்க முடியாது என்று புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல், FASTag இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதாவது, கேஷ் கொடுத்து சுங்கக் கட்டணம் செலுத்தி கடக்க முடியாது; FASTag பயன்படுத்தியோ அல்லது அபராதத்துடன் UPI வழியாகவோ மட்டுமே செலுத்த வேண்டும். இது ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலும் தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய நிலையில், FASTag இல்லாத வாகனங்களுக்கு சுங்கக் கட்டண வசூல் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரொக்கத்தில் செலுத்தினால் வழக்கமான கட்டணத்தின் இரண்டு மடங்கு வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ட்ரான்ஸ்ஃபர் கொடுக்க லஞ்சம்... அம்பலமான உண்மை..! K.N. நேருவை பூந்து விலாசிய அண்ணாமலை..!

உதாரணமாக, ரூ.100 கட்டணமானால் ரூ.200 செலுத்த வேண்டும். ஆனால், UPI அல்லது பிற டிஜிட்டல் முறைகள் மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு மட்டுமே, அதாவது ரூ.125 போதும். முன்பு, ரொக்கமோ டிஜிட்டலோ எல்லாவற்றுக்கும் இரண்டு மடங்கு கட்டணம் இருந்தது. இந்த மாற்றம் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் குறைவதுடன், பயணம் வேகமாகவும் சீராகவும் மாறும். வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

இந்த மாற்றங்களின் நோக்கம், மக்களை FASTag அல்லது UPI போன்ற டிஜிட்டல் முறைகளுக்கு மாற்ற தூண்டுவதாகும். ரொக்கத்தை விட டிஜிட்டலுக்கு குறைவான கட்டணம் வசூலிப்பது இதற்கு உதவும். ஆனால், ஏப்ரல் 1க்குப் பிறகு இந்த வசதியும் மாற்றம் அடையும் எனக் கூறப்படுகிறது. FASTag இல்லாத வாகனங்கள் முழுமையாக தடை செய்யப்படலாம், இது பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும். 

மேலும், தடையற்ற பயணத்திற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயணிகளுக்கு பணச் சேமிப்பு மட்டுமின்றி, மன அழுத்தமில்லாத பயணத்தையும் உறுதி செய்கிறது. நாடு முழுவதும் 1,159 சுங்கச்சாவடிகளில் செல்லுபடியாகும் இந்த பாஸ், கார்கள், ஜீப்புகள், வேன்களுக்கு கிடைக்கிறது. ஒரு பாஸின் விலை ரூ.3,000. இதன் மூலம் 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாக பயணிக்கலாம் அல்லது செயல்படுத்திய நாளிலிருந்து ஒரு வருடம் வரை.

NHAI தகவலின்படி, நான்கு நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வருடாந்திர பாஸ்கள் விற்கப்பட்டு, ரூ.150 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழகம் அதிக எண்ணிக்கையில் பாஸ்களை வாங்கியுள்ளது, அதற்கு அடுத்து கர்நாடகா மற்றும் ஹரியானா. தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுங்கச்சாவடி பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெற்றுள்ளன. பாஸ் என்பது ப்ரீபெய்ட் வசதி; பயண வரம்பு எட்டியதும் தானாக நிலையான கட்டண முறைக்கு மாறும். இந்த மாற்றங்கள் நெடுஞ்சாலை போக்குவரத்தை நவீனமயமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் FASTag பயன்படுத்தி தயாராக இருக்க வேண்டும்!

இதையும் படிங்க: 2 நாள்ல முடிவ சொல்லுங்க!! பிரேமலதாவுக்கு செக் வைக்கும் பழனிசாமி! தேமுதிக யோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share