தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடகா அட்டூழியம்... அதிரடி ஆணை பிறப்பித்த காவிர் நீர் மேலாண்மை ஆணையம்!!
தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி தண்ணீரை பங்கிட்டில் பிரச்சனை இருந்த வந்தது. இதை அடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழகத்துக்கு கர்நாடகா மாதம் மாதம் வழங்க வேண்டிய தண்ணீர் குறித்தும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதில் பிரச்சனை வருவதை தவிர்க்கும்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகலாம் என்று இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா திறப்பது இல்லை. இப்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தீவிரமடையும் மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
அதுமட்டுமின்றி இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து காவிர் நீர் மேலாண்மை ஆணையம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், தமிழகத்துக்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கைதிகளிடம் அதை மட்டும் கேட்க கூடாது... சிறை விதிமுறைகளை அதிரடியாக மாற்றிய அரசு!!