×
 

மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணியை CBSE தொடங்கியது.

சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணியை தொடங்கியுள்ளது என்பது இந்திய கல்வித்துறையில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த முடிவு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பள்ளிக்கல்வி 2023 ஆகியவற்றின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது.

இதன் மூலம் மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்ப்பது, இந்திய மொழிகளை ஊக்குவிப்பது மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. தற்போதைய மாற்றத்தில், 2026-27 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ இணைப்புப் பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட உள்ளது. 

மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் பணியை CBSE தொடங்கியது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டில் முதற்கட்டமாக 6ம் வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 2 இந்திய மொழிகள் பயில்வது கட்டாயம்.

இதையும் படிங்க: என்னது..!! QR Code-ஐ ஸ்கேன் செஞ்சா பாட்டு கேக்குதா..!! CBSE கணிதத் தேர்வில் ரிக்ரோல் சர்ச்சை..!!

படிப்படியாக 2030-31க்குள் 10ம் வகுப்பு வரை இக்கொள்கை கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது. தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரண்டு மொழித் தாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இது பெரிய மாற்றமாக அமையும். மொழிகள் R1 (முதன்மை மொழி - உயர் நிலை), R2 (இடைநிலை) மற்றும் R3 (அடிப்படை நிலை) என மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படும்.

இதையும் படிங்க: அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share