பொறுப்புக்கு புறம்பான செயல்... மேலும் ஒரு பாக். தூதரக அதிகாரி வெளியேற கெடு!!
தனது பணிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக மேலும் ஒரு பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்தியாவிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டிருக்கிறது.
இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி ஜோதியின் செல்போனை ஆய்வு செய்தபோது, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பல விஷயங்களை பகிர்ந்திருப்பதும், இந்த அதிகாரிகள் மூலம் பாக் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரது அனைத்து சமூக வலைதள கணக்குகளும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் என்ன பேசினார் என்பது குறித்த தகவலையும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் உள்ள பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 13ம் தேதி ஒரு பாகிஸ்தான் அதிகாரி வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தனது பணிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி மேலும் ஒரு பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!
இதுக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர், இந்தியாவில் தனது பணிக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தார். எனவே அவரை கைது செய்வதாக இந்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே அவர் 24 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்.
இது குறித்து தூதர பொறுப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் வெளியேற்றப்படும் இரண்டாவது அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!