×
 

10th, ஐடிஐ படித்தவர்களுக்கு ஜாக்பாட்... மத்திய அரசு வேலை வாய்ப்பு...!

அப்ரெண்டிஸ் (Apprentice) பயிற்சிக்காக மொத்தம் 405 காலி இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அணுசக்தி எரிபொருள் வளாகம், அதாவது என்எப்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. இங்கு அப்ரெண்டிஸ் (Apprentice) பயிற்சிக்காக மொத்தம் 405 காலி இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க இருக்கக்கூடிய கிளைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 வயதிலிருந்து 25 வயசுக்குள் இருக்கக்கூடிய நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

அரசு விதிகளின் படி எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்பட்டிருக்கு. 

இதையும் படிங்க: மெல்ல மூழ்கும் டெல்லி... 17 லட்சம் மக்களுக்கு ஆபத்து... வெளியானது பகீர் காரணம்...!

இதுமட்டுமில்லாமல் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பா 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடிச்சிருக்க வேண்டியது கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவே அடிப்படை கல்வி தகுதியாக கோரப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்போட சிறப்பம்சம் என்னன்னு பார்த்தோம்னா,.இதற்கு எந்தவிதமான எழுத்து தேர்வும் கிடையாது. கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு மாதம் ரூ.9,600 -லிருந்து ரூ.10,560 வரைக்கும் ஸ்டைபண்ட் (Stipend) வழங்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கு. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.10.2025 அன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 15.11.2025. விண்ணப்பதாரர்கள் NAPS (National Apprenticeship Promotion Scheme) இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில், Nuclear Fuel Complex, Hyderabad என்ற நிறுவனத்தின் குறியீட்டு எண் (NAPS Establishment Code: E11153600013) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஒரு ஜாக்பாட் வாய்ப்ப கண்டிப்பாக மிஸ் பண்ணாதீங்க.

இதையும் படிங்க: திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்ய வேண்டுதலா?... இந்த மாற்றத்தை உடனே நோட் பண்ணுங்க...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share