×
 

கூகுள் குரோம் யூஸ் பண்ணுறீங்களா? முடிச்சி விட்டீங்க போங்க.. மத்திய அரசு வெளியிட்ட வார்னிங்..!

Windows மற்றும் Mac கம்யூட்டர்களை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

உலகம் முழுவதும் சைபர் கிரைம் குற்றவாளிகள் பெருகி வருகின்றனர். இணையத்தி தேவையில்லாத ஒரு லிங்கை தொட்டால் போதும் நமது அக்கவுண்டில் உள்ள மொத்த பணமும் அம்பேல் தான். நாளுக்கு நாள் சைபர் குற்றவாளிகளின் மோசடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடி செய்ய அவர்கள் பயன்படுத்தும் வழிகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நன்றாக படித்து, உயரிய இடத்தில் பணியில் உள்ளவர்களும் தங்களது பணத்தை தொலைப்பது அரங்கேறி வருகிறது.

இதனை தடுக்கவே மத்திய அரசு அனைவருக்கும் அறிவுறுத்தலை அனைத்து வழிகளிலும் வழங்கிவருகிறது. தற்போது நாம் மற்ற எவரேனும் ஒருவருக்கு செல்போனில் அழைத்தால் கூட இது தொடர்பான அறிவுறுத்தல் நமக்கு மத்திய அரசு மூலம் வழங்கப்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..


இதேபோல் மத்திய அரசின் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்புக்குழு அவ்வப்போது ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அதுஎன்னவென்றால் உலகம் முழுவதும் ஏற்படும் சைபர் மோசடிகள்  மற்றும் ஹேக்கிங் எதனால் ஏற்படுகிறது, எவ்வழிகளில் எல்லாம் இணையவாசிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க: கொலை முயற்சியா? விபத்தா? யார் சொல்வது பொய்..? போலீஸ் அறிக்கையை மறுக்கும் மதுரை ஆதினம்..!

குறிப்பாக இந்தியாவில் இணையவாசிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து நாட்டு மக்களை எச்சரிக்கும். Indian Computer Emergency Response Team என இந்த குழுவிற்கு பெயர். இதன் சுருக்கமே CERT-In ஆகும். தமிழில்  சொல்வது என்றால் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) என கூறலாம். 

அந்த குழுகொடுக்கும் எச்சரிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதனை செய்தால் இணைய மோசடிகள் மற்றும் சைபர் அட்டாக்கில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இல்லையென்றால் சிக்கல் தான். அந்த குழு இப்போது கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

குறிப்பாக, டெஸ்க்டாப் தளங்களில் Google Chrome -ஐப் பயன்படுத்துபவர்களுக்கு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சைபர் மோசடியாளர்கள் கணினிகளில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் கணிணியை கட்டுபாட்டில் எடுத்துக்கொள்ளவும் செய்வார்கள் என கூறியுள்ளது.

இதனைதடுக்க என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்கி உள்ளது. சிஐவிஎன் - 2025 - 0099 (CIVN - 2025 - 0099) என்ற சைபர் தாக்குதலை கூகுள் குரோம் செயலி தற்போது சந்தித்து வருகின்றது. விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் கூகுளின் முந்தைய வெர்சனான 136.0.7103.113/.114, லினெக்ஸ் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் வெர்சன் 136.0.7103.113 ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

ஆகையால், இந்த வெர்சனை வைத்திருப்பவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க அப்டேட் வெர்சனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கணினிக்கு தேவையான பாதுகாப்பு செயலிகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: கை, கால்களை கட்டி வாயில் துணியை அடைத்து.. சினிமா பாணியில் தொழிலதிபர் கடத்தல்.. பகீர் பின்னணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share