×
 

மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் அன்றாட உணவில் இன்றியமையாத பொருளாக விளங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் பயிர் சேதமடைந்து உற்பத்தி கணிசமாக குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால் சில்லறை சந்தையில் வெங்காய விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

காய்கறி சமையலில் அத்தியாவசியமான இந்தப் பொருளின் விலை உயர்வு குடும்ப செலவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் இருந்து ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு சரக்கு ரயில் மூலம் 400 டன் வெங்காயம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. 

இந்த வெங்காயங்களை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் நாபெட் (நேஷனல் அக்ரிகல்ச்சரல் கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங் ஃபெடரேஷன்) விற்பனை நிலையங்கள் வழியாக சில்லறை விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35க்கு விற்பனை செய்யும் பணியை நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதையும் படிங்க: டிவியில் விளம்பர மழை வரப்போகிறதா? 10+2 விதியை ரத்து செய்த மத்திய அரசு..! முழு சுதந்திரம்..!!

இந்த நடவடிக்கை டெல்லியில் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் சென்னை, மதுரை, எர்ணாகுளம் மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு முக்கிய மையங்களுக்கும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயம் விநியோகிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெங்காயம் இந்திய சமையலில் அடிப்படைப் பொருளாக இருப்பதால் அதன் விலை உயர்வு நுகர்வோர் விலைக் குறியீட்டையும் பாதிக்கும். அரசின் இந்த இடைத்தரகர்கள் நீக்கிய நேரடி விநியோக முறை, சந்தை விலையை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உற்பத்தி குறைவை ஈடுசெய்ய இறக்குமதி மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அருகிலுள்ள நாபெட் அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்களில் சென்று குறைந்த விலையில் வெங்காயம் வாங்கிப் பயன்பெறலாம்.

இதையும் படிங்க: வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share