×
 

குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??

இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் ஏற்பட்ட சந்தேகிக்கப்படும் விஷப் பாதிப்பால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ராஜஸ்தானில் 2 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 11 குழந்தைகளின் உயிரிழப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஹெல்த் சர்வீஸஸ் (DGHS) 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை அளிக்க வேண்டாம் என அறிவுரை வெளியிட்டுள்ளது. இது 2013-ஆம் ஆண்டு அமெரிக்காவின் FDA வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது.

சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்த சோக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. 1 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் லேசான காய்ச்சல், இருமல் காரணமாக உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். அப்போது அளிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ-டிஎஸ்' என்ற இருமல் மருந்துகளை உட்கொண்ட பிறகு, அவற்றின் நிலைமை திடீரென மோசமடைந்தது.

இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோங்க! ஹிந்தி திணிப்பு… தவெக தலைவர் விஜய் ஆவேசம்

சிறுநீர் வெளியேறாமை, சிறுநீரகத் தொற்று, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. பலர் அருகிலுள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 குழந்தைகள் டயலிசிஸ் சிகிச்சை பெற்றபோதிலும் உயிரிழந்தனர். இப்படி இதுவரை 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அணுகுமுறை குழுக்கள் சிந்த்வாராவில் விசாரணை நடத்தி, மருந்து மாத்திரைகளை சேகரித்துள்ளன. மேலும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மற்றும் மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (SFDA) ஆகியவை இந்த மருந்துகளின் தரத்தை சோதித்து வருகின்றன.

இதனிடையே மத்திய அரசின் DGHS வெளியிட்ட அறிவுரையில், "2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் அளிப்பது ஆபத்தானது. அவை சுவாசப் பிரச்சினைகளை தீவிரப்படுத்தி, உடல் அமைப்பின் வளர்ச்சியை பாதிக்கலாம்," என எச்சரிக்கையளித்துள்ளது. மேலும் சில 'சிரப்'களில் உள்ள டெக்ஸ்ட்ரோ - மெதோர்பான் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்றும் சொல்லப்படுகிறது.

குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவும், தனியார் மருந்துகளை தவிர்க்கவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் இந்த அறிவுரையை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய விமானப்படைக்கு புதிய ரஃபேல் விமானங்கள்.. மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share