×
 

வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!

டெல்லியில் நடை பயிற்சி மேற்கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் நான்கரை சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளத

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுதா ராமகிருஷ்ணன். இவர் ஒரு முக்கியமான அரசியல் பிரமுகராகவும், வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.

அவரது அரசியல் வாழ்க்கை பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் கொண்டதாக உள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா, தனது தனித்துவமான பிரச்சார பாணி மற்றும் சமூக ஈடுபாடு மூலம் கவனம் பெற்றவர்.

2024 ஆம் ஆண்டு மயிலாடுதுறை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சுதா ராமகிருஷ்ணன் அதிமுக, பாமக, மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், அவர் 5.18 லட்சம் வாக்குகளைப் பெற்று, அதிமுக வேட்பாளர் பாபுவை 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இதையும் படிங்க: இந்தியாவில் இதுவரை 43 OTT தளங்களுக்கு தடை.. நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு..!

நாடாளுமன்றத்தில், சுதா தனது கருத்துகளைத் துணிச்சலாக முன்வைப்பவராக அறியப்படுகிறார். இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்பி சுதா டெல்லி சென்றுள்ளார்.

இதனிடையே, டெல்லியில் இன்று நடைப்பயிற்சி சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் நான்கரை சவரன் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாணக்கியபுரி பகுதியில் எம் பி சுதா நடைப்பயிற்சி மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் எம் பி சுதாவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் கழுத்தில் காயமடைந்த நிலையில் சுதா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  நடைப்பயிற்சி மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மூன்றே நாளில் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! இதுதான் வளர்ந்து வரும் இந்தியா.. ராஜ்யசபாவில் மார்த்தட்டிய ஜே.பி நட்டா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share