×
 

#BREAKING தற்காலிக கொடி கம்பங்கள்... அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநகராட்சி...!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை, பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுகளில் தற்காலிக கொடிக்கம்புகள் நட சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. அப்படி முன் அனுமதி பெறாமல் நடப்படக்கூடிய தற்காலிக கொடிக்கம்பங்கள் எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி அகற்றப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், ஊர்வலம், தருணா, பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டும் எனில் அரசாணை எண் 629 வருவாய் மற்றும் பேரிடன் மேலாண்மை துறை குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற்று தற்காலிக கொடிக்கம்பங்களை நட வேண்டும். 

அவ்வாறு முறையாக முன் அனுமதி பெறாமல் நடப்படக்கூடிய தற்காலிக கொடிக்கம்பங்கள் சென்னை மாநகராட்சி மூலம் எந்தவிதமான முன் அறிவிப்பு இன்றி அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கக்கூடிய நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரகளை  மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.இதற்காக சென்னை மாநகராட்சியின் உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக சாலைகளின் இரு புறங்களிலும் கொடி கம்பங்களை நடும் வழக்கம் உள்ளது.  இவ்வாறு நடப்படும் கொடிக்கம்பங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, கொடி கம்பங்கள் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் சாலையோரம் கொடி கம்பங்களை நடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க: சபாஷ்...! தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு... ரூ.186 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு...!

இதற்கு முன்னதாக த வெக பரப்புரையின் போது, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் ரோட் ஷோ மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிக கொடி கம்பங்களுக்கான இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... படகுகள் தயார்... உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share