CHENNAI ONE செயலி... டிக்கெட் எப்படி முன்பதிவு செய்யலாம்- னு தெரியுமா? முழு விவரம்...!
சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி பேருந்து டிக்கெட் எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சென்னை ஒன் செயலி மக்களும் பொருட்களும் தடையின்றி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே QR கோட் மூலம் அனைத்து போக்குவரத்து மோட்களையும் இணைக்கும் தொழில்நுட்பம் இந்தச் செயலியின் மையமாக உள்ளது. முன்னதாக பேருந்துகளுக்கான டிக்கெட்டைப் பிரத்யேகமாக வாங்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயிலுக்கு வேறு ஒரு ஆப் தேவை. மேலும் சபர்பன் ரயில்களுக்கு ரயில்வேயின் UTS பயன்படுத்த வேண்டும். கடைசி மைல் இணைப்புக்கு ஆட்டோ அல்லது கேப் ஆக்ரிகேட்டர்கள் தனியாகத் தேட வேண்டும். ஆனால், சென்னை ஒன்று இவற்றை அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. பயணி, செயலியில் தனது பயண இலக்கைத் தேர்ந்தெடுத்து, பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், நம்ம யாத்திரி ஆட்டோக்கள் அல்லது கேப் சேவைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
QR கோட் உருவாக்கப்பட்டவுடன், அது அனைத்து மோட்களிலும் செல்லுபடியாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கிறது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இயங்குவதால், சென்னையின் பன்முகத்தன்மையான மக்களுக்கு ஏற்றது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து வகையான பொது போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் புதிய முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஒன் செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த சென்னை ஒன் செயலியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். சென்னை ஒன் மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். ஆப்பை ஓபன் செய்தவுடன் முகப்பு பக்கத்தின் கீழ் BUS OTP, BUS QR, BUS TICKET என நீல நிறத்தில் பட்டன் போன்ற ஒரு ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்தால் ஸ்கேன் செய்வதற்கான வசதி மற்றும் OTP பயன்படுத்துவதற்கான வசதி ஆகியவை காண்பிக்கப்படும். நீங்கள் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறினால் சென்னை 1 மொபைல் ஆப்பை பயன்படுத்தும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அதில் ஐந்து இலக்க ஓடிபி ஒன்று இடம் பெற்றிருக்கும்.
இதையும் படிங்க: ஆஹா செம்ம-ல... “CHENNAI ONE”... அனைத்து பொது போக்குவரத்தும் ஒரே APP- ல்… மக்களிடம் கூடும் மவுசு...!
அதன் கீழ் க்யூ ஆர் கோடு ஒன்று இருக்கும். உதாரணமாக ஓடிபி மொபைல் ஆப்பிள் பதிவிட்டால் எந்த வழிதடத்தில் செல்லும் பேருந்து என்பதை செயலை காட்டும். அதில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அதற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தை புறப்படும் இடமாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களை செயலில் காண்பிக்கும்.
எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அதை நீங்கள் தேர்வு செய்தால் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப்ஷனுக்கு செல்லும். எத்தனை டிக்கட் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டு புக் பஸ் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். பிறகு கட்டணம் செலுத்தும் இடத்திற்கு செல்லும். CUMTA UPI, GOOGLE PAY, போன் பே மற்றும் இதர UPI ஆப்களையும் காண்பிக்கும். அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பிறகு கட்டணத்தை எளிதாக செலுத்தி விடலாம். இதை நடத்துநரிடம் காண்பித்தால் போதும். இதேபோல் தான் பேருந்துகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களில் இருக்கும் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தாலும் டிக்கெட் முன்பதிவிற்கான ஸ்டெப்ஸ்களை காண்பிக்கும்.
இதையும் படிங்க: இனி NO டென்ஷன்… “CHENNAI ONE” செயலியை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்…!