ஆனா இது புதுசா இருக்குன்னே.. திருமணத்தன்று பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்!
உத்திரபிரதேசத்தில் திருமணத்தன்று மணமகளுக்கு குழந்தை பிறந்ததால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்தப் புதுப்பெண் தனது திருமண நாள் இரவில் கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறும் வரை தான் திருமண சந்தோஷம் மண்டபத்தில் இருந்தது.
உடனடியாக மணமகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு வயிற்று வலி கடுமையாக இருந்தது. மருத்துவமனைக்கு சென்றதும் மணமகனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் கூறினார்கள். அந்தப் பெண் அப்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். மறுநாளே அந்த மணப்பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக இந்தியா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மணமகளும் அவருடைய குடும்பத்தினரும் இதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தும் அது குறித்து மணமகன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்து விட்டனர். வயிறு பெரிதாக இருந்தது பற்றி தொடக்கத்திலேயே கேட்ட போது சிறுநீரக கோளாறுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அப்படி இருப்பதாக கூறி அந்த நேரத்தில் சமாளித்து விட்டனர்.
இதையும் படிங்க: இஃப்தார் நோன்பில் பங்கேற்கும் விஜய் அறிவிப்பு..! ஏன் ப்ரோ இப்படி.? அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..!
அதை உண்மை என்று நம்பி மணமகன் குடும்பத்தினரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இப்போது மருத்துவமனையில் உண்மை வெளியே வந்த போது மணமகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணமகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்ட கிரேட்டர் நொய்டா கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டுக்கு சென்றனர்.
புது மணப்பெண்ணான மருமகளையோஅல்லது அவருடைய குழந்தையையோ ஏற்றுக் கொள்ள மணமகனின் தாயார் மறுத்துவிட்டார். பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி இந்த விஷயத்தை போலீஸ், கோர்ட் என்று போய் பெரிது படுத்த வேண்டாம்; மணமகளை அழைத்துக் கொண்டு அவர்கள் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு போகட்டும். நீங்கள் மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யுங்கள் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மணமகள் குடும்பத்தினர் தங்கள் மகளையும் பிறந்த குழந்தையும் தங்கள் சொந்த செகந்திராபாத்திற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர். இரு குடும்பத்தினருமே பரஸ்பரம் புகார் தெரிவிக்காமல் தங்களுக்குள்ளேயே சமரசம் செய்து கொண்டதால் இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கத் தேவை இல்லாமல் போய் விட்டதாக திருமணம் நடந்த பகுதியின் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மற்றொரு பத்திரிகையில் திருமணம் தாமதமாக நடைபெற்றது. அதற்கு 7 மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியதால் கர்ப்பமாகிவிட்டதாக மணமகள் வீட்டில் கூறியதாகவும் ஆனால் மணமகன் அதை ஏற்க மறுத்து விட்டதாகும் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணம் தர மறுத்ததால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மகன்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..