ஈரான் மீது பொருளாதார தடை?! அமெரிக்க அடுத்த திட்டம்! ஆதரவாக களமிறங்கிய சீனா, ரஷ்யா!
ஐநாவில் சீனா, ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீட்டோ அதிகா ரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தன. இதனால் அந்த பணித்திட்டம் ஏற்க முடியாமல் போனது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) அமெரிக்கா முன்மொழிந்த ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை தொடர்பான திட்டம் சீனா மற்றும் ரஷியாவின் கடும் எதிர்ப்பால் தோல்வியடைந்துள்ளது.
இந்த மாதம் (மார்ச் 2026) UNSC தலைமை அமெரிக்காவிடம் இருப்பதால், மரபுப்படி அமெரிக்கா தயாரித்த மாதாந்திர பணித்திட்டத்தில் ஈரான் மீதான 1737 தடை குழு (1737 Sanctions Committee) பணிகள் குறித்த விளக்கம் இடம்பெற்றிருந்தது. இதை சீனாவும் ரஷியாவும் எதிர்த்து, தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தனர்.
இந்த பணித்திட்டத்தில் ஈரான் மீதான பழைய தடைகள் (Resolution 1737) குறித்த பிரீபிங் (briefing) அடங்கியிருந்தது. இந்த தடைகள் 2025 செப்டம்பரில் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை 'ஸ்னாப்பேக்' (snapback) மெக்கானிசத்தை தூண்டியதால் மீண்டும் அமல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: தொடங்கியது நீங்கள்தான்! முடிவு உங்கள்கையில் இல்லை!! இஸ்ரேல், அமெரிக்காவை எச்சரித்து ஈரான் பதில் தாக்குதல்!
ஆனால் ரஷியா இதை ஏற்க மறுத்து, "1737 குழுவின் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு சட்ட ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ அடிப்படை இல்லை" என்று கூறியது. இதனால் மார்ச் மாத பணித்திட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இது ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் நடந்துள்ளது. பிப்ரவரி 28 முதல் தொடங்கிய போரில் ஈரானின் அணு திட்டம், ஏவுகணை திறன் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஈரானின் உச்ச தலைவர் கமேனி உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் UNSC-யில் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேலும் இறுக்கமாக்க முயன்றது.
சீனாவும் ரஷியாவும் ஈரானுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளன. ரஷியா, "அமெரிக்காவின் பணித்திட்டத்தில் 1737 குழு பிரீபிங் இருப்பதால் அதை ஏற்க முடியவில்லை" என்று தனது நிரந்தர பிரதிநிதி மூலம் தெரிவித்தது. இது UNSC-யில் ஈரான் விவகாரத்தில் பெரும் பிளவை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது தலைமை மாதத்தில் இத்தகைய திட்டத்தை முன்வைத்தாலும், வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா - ரஷியா தடுப்பதால் தோல்வியடைந்துள்ளது.
இந்த சம்பவம் ஈரான் மீதான சர்வதேச தடைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஈரான் அணு ஆயுத திட்டம் குறித்து உலக நாடுகள் கவலை அடைந்தாலும், சீனா - ரஷியா ஆதரவால் புதிய தடைகள் வருவது கடினமாகியுள்ளது. போர் தொடரும் நிலையில் UNSC-யில் பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம்! பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்! ஈரான் - அமெரிக்கா பேச்சு! சமரச தீர்வா? போரா?