×
 

சீன அதிபர் ஜி ஜின்பிங் காணவில்லை!! இந்தியாவுக்கு ஆபத்து! உடல்நிலை சரிந்ததா? சகாப்தம் முடிந்ததா?

சீனாவில் ஜின்பிங் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது என்று பலரும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். அங்கு நிகழப்போகும் அரசியல் மாற்றத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வரக்கூடும் என்ற அச்சமும் தொற்றி இருக்கிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் எங்கே? இந்த கேள்வி தான் இப்போது சர்வதேச அரசியல் களத்தை உலுக்கிக்கொண்டு இருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் முக்கியமானவர் ஜின்பிங்; டிரம்ப் ஒரு துருவம் என்றால், இன்னொரு துருவம் ஜின்பிங். சர்வதேச ஊடகங்களில் தினமும் ஏதாவது ஒரு செய்தியின் தலைப்பாக இருப்பார். சீனாவில் தினமும் ஒருமுறையேனும் பொதுவில் தோன்றுவார். அந்நாட்டின் அரசு ஊடகத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக தினமும் இருப்பார். சீனா அங்கம் வகிக்கும்  சர்வதேச அமைப்புகளின் உச்சி மாநாட்டில் தவறாமல் பங்கேற்பார். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது.

மே இறுதி வாரத்தில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார். 15 நாட்கள் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது. மீண்டும் ஜூன் 4க்கு பிறகு மாயமானார். அதன் பிறகு வரை வெறும் 2 முறை மட்டுமே தலை காட்டி இருக்கிறார்.

சீனாவில் ஜின்பிங் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் வந்து விட்டது என்று பலரும் ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். அங்கு நிகழப்போகும் அரசியல் மாற்றத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வரக்கூடும் என்ற அச்சமும் தொற்றி இருக்கிறது. உண்மையில் ஷி ஜின்பிங் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்? சீனாவில் அப்படி என்ன தான் நடக்கிறது? ஜின்பிங் அதிகாரத்தை இழந்தால், இந்தியாவுக்கு ஏன் பேராபத்து? என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: பிரிக்ஸ் நாடுகளை பழிவாங்கும் அமெரிக்கா! ட்ரம்ப் ஆட்டத்திற்கு சீனா கொடுத்த பதிலடி!!

நம் நாட்டில் நடப்பது போல் சீனாவில் மக்கள் ஆட்சி கிடையாது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் சர்வ அதிகாரமும் கொண்ட ஒரே கட்சி. கட்சியின் உயர் மட்ட தலைவராக யார் வருகிறாரோ அவரே சீனாவில் அதிபர் பதவிக்கு வர முடியும். அந்த வகையில் சீன கம்யூனிஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஷி ஜின்பிங் 2013ல் அதிபர் ஆனார். சீனாவின் சக்தி வாய்ந்த இன்னொரு பதவி மத்திய ராணுவ கமிஷன் தலைவர் பதவி. இதையும் தன் வசமே வைத்திருக்கிறார் ஜின்பிங். ஒருவர் 10 ஆண்டு மட்டுமே பொதுச்செயலாளராக இருக்க முடியும் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மரபு.

இந்த மரபை ஜின்பிங் உடைத்தார். 10 ஆண்டை கடந்தும் பொதுச்செயலாளர் பதவியை வைத்துக்கொண்டார். இதனால் 10 ஆண்டுகள் தாண்டியும் அவரால் அதிபர் பதவியை தொடர முடிந்தது. அவர் வாழ்நாள் அதிபர் என்றும் கருதப்பட்டார். 12 ஆண்டுகளை தாண்டியும் அதிபராக இருக்கும் ஜின்பிங், இப்போது மிகப்பெரிய நெருக்கடி நிலையில் சிக்கி இருக்கிறார்.

ஜூன் 4ம் தேதி பெலாரஸ் அதிபர் அலக்சாண்டரை சந்தித்தார். 20ம் தேதி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபரிடம் பேச்சு நடத்தினார். 24ம் தேதி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் மீட்டிங் நடந்தது.

இந்த 3 முறை மட்டும் தான் ஜின்பிங் வெளியே வந்து இருக்கிறார். மற்ற எந்த நாட்களிலும் அவர் வெளியே தலைகாட்டவில்லை. தான் கவனித்து வந்த பல முக்கிய வேலைகளை தனது ஆதராவளர்களுக்கு பிரித்து கொடுத்து இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் தவிர்க்க முடியாத சக்தியான ஜின்பிங்கை சீனாவின் அரசு ஊடகமே இப்போதெல்லாம் காட்டுவதில்லை. இதனால் அவர் தனது அதிகாரத்தை இழந்து விட்டாரோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. பிரேசில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கும் கூட அவர் வரவில்லை. தனக்கு பதில் பிரதமரை அனுப்பி வைத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தை கவுன்ட்டர் செய்யும் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு பிரிக்ஸ். இதன் உச்சி மாநாட்டை ஜின்பிங் ஒரு போதும் தவறவிட்டது இல்லை. சீனாவின் பரம எதிரியான அமெரிக்காவின் அதிபர் டிரம்பின் வரி மிரட்டலுக்கு நடுவே துவங்கிய முக்கியத்துவமான உச்சி மாநாட்டுக்கே ஜின்பிங் வராதது தான் அவர் பற்றி சந்தேகங்களை எழுப்ப ஆரம்பித்தது.

இந்த முறை பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் பிரேசில் மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிப்பதாக அறிவித்தால் தான் ஜின்பிங் வரவில்லை என்று முதலில் தகவல் பரவியது. ஆனால் உண்மையில் சீனாவில் நடக்கும் அரசியல் குழப்பம் தான் அவர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காமல் போனதற்கு காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தில் தனக்கு இருந்த முக்கிய அதிகாரத்தை ஜின்பிங் இழந்து இருப்பது தெரியவந்துள்ளது.

ஜின்பிங் உடல் நிலை பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருப்பதால் தான் அவர் அதிகம் வெளியே வரவில்லை என்றும் சில ரிப்போர்ட் சொல்கிறது. கடந்த மாதம் துவக்கத்தில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டரை அவர் சந்தித்த போது ஜின்பிங் மிகவும் சோர்வாக இருந்தார். அவரிடம் கவனச்சிதறல் அதிகம் தெரிந்தது. உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தார் என்று பெலாரஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இருப்பினும் சீனா ஆட்சி மாற்றத்தை சந்திக்க போவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் என்று சர்வதேச நிபுணர்கள் அடித்து சொல்கின்றனர்.

ஆனால் அதிபர் ஆக போவது ஜின்பிங்கின் ஆதரவாளர் வாங் யாங்கா? அல்லது மாஜி அதிபர் ஜின்டோவோ ஆதரவு பெற்ற யூக்ஸியாவா என்பது மட்டும் தான் இப்போதைக்கு விடை தெரியாத கேள்வி. யார் அதிபராகும் வாய்ப்பு வந்தாலும், அதனால் இந்தியாவுக்கு பேராபத்து நேர வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக சீனாவில் இப்படி ஆட்சி மாற்றம் வரும் சூழல் நேரும் போது, பதவியில் இருக்கும் அதிபர் தரப்பினர் நெருக்கடிகளை மறைக்க மக்களை திசை திருப்பி விடுவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர்.

குறிப்பாக தேவையின்றி எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இது இந்தியாவுக்கு சவாலை ஏற்படுத்தக்கூடும். ஜின்பிங் அதிபர் ஆகும் முன்பு அப்போதைய அதிபர் ஜின்டாவோ தரப்பும் இதை செய்தது. ஜின்பிங் பதவி போகும் நிலை வந்தாலும் இந்தியாவுக்கு எதிரான எல்லை பிரச்னை தலை தூக்க வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்தார் அதிபர் ட்ரம்ப்.. அடுத்தடுத்து வரி விதிப்பு அமல்.. இந்தியா தப்புமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share