காலையிலேயே அதிர்ச்சி.. அசுர வேகத்தில் பைக் மீது ஏறி இறங்கிய சரக்கு வாகனம்.. 3 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி..!
சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் வெங்கடேசன், சிவசக்தி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சின்னசேலத்தில் இருந்து அம்மையகரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டியில் இருந்து சேலம் நோக்கி கொய்யாப்பழம் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வாகனம் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், வெங்கடேசன் மற்றும் சிவசக்தி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூன்று பேரின் சடலத்தை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது நாககுப்பம் கிராமத்தை சிவசக்தி என்பவர் கிழங்கு மில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும், அவரை அழைத்து வர அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் மற்றும் வெங்கடேசன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் கொய்யாப்பழம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் அதிவேகமாக மோதியதில் மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது போலீசார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் அறுந்து விழுந்த தொங்குப்பாலம்.. 5 பேர் பலி.. 24 பேர் படுகாயம்..!!
மேலும் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். மேலும் இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்: அந்தரத்தில் தொங்கிய டேங்கர் லாரி.. ஒரு வழியாக.. 27 நாட்களுக்குப் பிறகு மீட்பு..!!