×
 

“என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

இதனை திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திறந்து வைக்க உள்ளதாக திமுகவினர்கள் கொடிக்கம்பங்களை வைத்து பேனர் வைத்து ஏற்பாடு செய்திருந்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை திமுக எம்எல்ஏ தேவராஜுக்கு பதிலாக அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் திறந்து வைத்ததால் இரு கட்சி நிர்வாகிகளும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வார்டு எண் 5-யில்
2020ஆம் நிதியாண்டில் ரூபாய் 13 லட்சத்து 80 ஆயிரத்தில் புதிதாக நியாயவிலை கடை கட்டுப்பட்டு இன்று திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திறந்து வைக்க உள்ளதாக திமுகவினர்கள் கொடிக்கம்பங்களை வைத்து பேனர் வைத்து ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்நிலையில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டதாகவும் அதனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள கல்வெட்டில் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் திறந்து வைப்பதாக பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

இதையும் படிங்க: கனிமொழி அவர்களே...!! திமுகவை ஒரு காலத்துல காப்பாத்துனதே அதிமுக தான் தெரியுமா? - எடப்பாடி அதிரடி பதிலடி...!

சம்பந்தப்பட்ட வாணியம்பாடி கிராமிய காவல்துறை போலீசார் இரு தரப்படையும் சமாதானம் செய்து வைக்க முயன்ற நிலையில், அவர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பெரும் பரபரப்பட்டது. அதன் பிறகு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அங்க இருக்கும் அதிகாரிடம் இதை குறித்து கேட்ட அறிந்தார். என்னுடைய நிதியில் இருந்து கட்டப்பட்டதாக இந்த கட்டிடம் எப்படி? அவர்கள் திறப்பார்கள் என கோபமாக கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு சலசலப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: வீரியமெடுக்கும் SIR விவகாரம்... முதல்வர் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share