வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த்... சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்...!
நடிகர் ரஜினிகாந்திற்கு 75 வயதை குறிக்கும் பவள விழா பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த சகாப்தமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்திற்கு 75 வயதை குறிக்கும் பவள விழா பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் 1975 ஆம் ஆண்டு தான் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே தனி வில்லனாக முத்திரைப்பதித்த ரஜினி, 16 வயதினிலே, மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய திரைப்படங்களில் பக்கா வில்லனாக நடித்தார். 1978 ஆம் ஆண்டு பைரவி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கலரான நடிகர்களே கோலோச்சி வந்த காலக்கட்டத்தில் கருப்பு நிறம், பரட்டை தலையுடன் திரையில் தோன்றிய ரஜினி, தனது ஸ்டைல் மற்றும் வசீகரமான நடிப்பினால் தமிழ் சினிமாவின் தலைமகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் இருந்து வருகிறார்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பிரபலங்களும் வாழ்த்து கூற காத்திருக்கின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... காலில் பாய்ந்த தோட்டா... பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...!
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!. ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar
ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!. மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! என வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: 3 கோடிக்கும் அதிகமான ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் முடக்கம்... ரயில்வே எடுத்த பரபரப்பு முடிவு... காரணம் என்ன?