தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து மீண்டும் நலம் விசாரித்தார்.
கடந்த ஜனவரி 30ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.நிகழ்ச்சியின் நடுவே எச் ராஜா திடீரென மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அங்கிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எச்.ராஜாவிற்கு பக்கவாதம் தாக்கியுள்ளதாகவும், 6 மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேள்விப்பட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சோசியல் மீடியாவில் எச்.ராஜா நலம் பெற வேண்டி வாழ்த்து செய்திகளை பதிவிட்டதோடு, நேரிலும் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், அரசியலில் எதிர் எதிர் துருவமாகவும், திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த எச்.ராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!
பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுதொடர்பாக எச் ராஜாவின் எக்ஸ் தள பக்கத்தில் முதல்வரின் கையை எச் ராஜா பிடித்து பேசிவதும், ஸ்டாலின் அருகே டிஆர் பாலு எம்பி நிற்கும் போட்டோவும் வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் ‛‛தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு எம்பி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச் ராஜாவை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
எச்.ராஜா விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவிற்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் - எச்.ராஜா குடும்பத்தினர்'' என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!