×
 

டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

முதல்வர் விஜய் 2வது முறையாக டெல்லிக்கு சென்றடைந்தார்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மே 10, 2026 அன்று பதவியேற்ற சி. ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், முன்னாள் திரைப்பட நடிகருமான அவர், தனது இரண்டாவது டெல்லி பயணத்தை மேற்கொண்டுள்ளார். 3 நாள் பயணமாக இன்று தனிவிமானம் மூலம் டெல்லி சென்றுள்ள அவர், நாளை (ஜூன் 11) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பார். 

இந்தப் பயணம் அவரது பதவியேற்புக்குப் பிறகான முக்கியமான இரண்டாவது டெல்லி வருகையாகும். முதல் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்த விஜய், இம்முறை நிதி ஆயோக் கூட்டத்தின் மூலம் மத்திய அரசுடன் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்பதுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்தவும் வாய்ப்பு உள்ளது. 

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்களைப் பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு மே 10 அன்று பதவியேற்றது. இது தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஆறு தசாப்த கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. பதவியேற்பு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்கில் நடைபெற்றபோது, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இதையும் படிங்க: மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் விஜய். சமீபத்தில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்துக்கான ஒப்பந்தம் மத்திய அரசுடன் கையெழுத்தானது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. முதன்முறையாக டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 2 வது முறையாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

இதையும் படிங்க: இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share