×
 

சென்னை டூ டெல்லி..! பரபரக்கும் அரசியல்.. முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, மே 10 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். அவரது கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியமைத்தது. இது தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் இருமுனை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயும் அவர்களுக்கு பொதுவில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் முதல்வர் விஜய் டெல்லி சென்றடைந்தார். டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையும் படிங்க: உணவே உயிர்... World Hunger Day-யில் முதல்வர் விஜய் மனிதநேய செயல்..! முக்கிய உத்தரவு..!

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்த டெல்லி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இன்று மாலை 4:30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து 6.30 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார். இதை அடுத்து 8.30 மணி அளவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளார்.

இதையும் படிங்க: மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share