×
 
☰

ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆடவர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்த இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நட்சத்திர வீரர் ஹரிஹரனுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ₹30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டு வரும் வேளையில், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்று முத்திரை பதித்துள்ளது. இவ்வணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பேட்மிண்டன் புயல் ஹரிஹரன் இடம்பெற்றுத் தனது அசாத்திய திறமையால் வெற்றியை வசமாக்கியுள்ளார்.

இச்சாதனையைக் கொண்டாடும் வகையில், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள முதலமைச்சர் விஜய், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாரிமுனை கதர் வாரிய கொலு கண்காட்சியில் முதல்வர் விஜய் சிலை! அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார்!

மேலும், வீரரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அரசு நிதி அறிவிப்பை வெளியிட்ட அவர், ஹரிஹரன் அவர்களின் திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ₹30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் உயரிய நிதியுதவி பெற்று வரும் திரு.ஹரிஹரன் அவர்களின் இந்த இமாலய சாதனை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது; விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும், அவர் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன் எனப் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் காம்ப்ரமைஸ் ஆகுவிங்களா CM..? பாலியல் குற்றம்... பொளந்து கட்டிய TTV தினகரன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share