காலையிலேயே குட் நியூஸ் சொன்ன சி.எம். விஜய்... தாய்மாமன் தங்க மோதி திட்டம் குறித்து அதி முக்கிய அறிவிப்பு...!
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் இந்த தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்காக, ரூ.755.383 கோடி மதிப்பீட்டில் 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamil Nadu Medical Services Corporation Limited - TNMSC) டெண்டர் கோரியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தங்க மோதிரங்களை கொள்முதல் செய்யும் டெண்டரை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தவெகவுக்கு வந்த வினை... ஆதாரங்களை திரட்டி ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த திமுக..!
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் இந்த தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.755.383 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டுள்ளது.
மேலும், 916 ஹால்மார்க் தரச்சான்று பெற்ற தங்க மோதிரங்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் டெண்டர் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், இதுவரை பிறந்த குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15ம் தேதி அன்று, முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல் தங்க மோதிரத்தை வழங்கி, இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: எம்.எ.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்ததும்... சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான 4 சம்பவங்கள்...!