சுகாதாரத்துறை சவால்கள்..? CM விஜய் தலைமையில் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!
சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுகாதாரத் துறையின் முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் துறையின் செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று, தற்போதைய சுகாதாரச் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
கூட்டத்தில் முதன்மையாகப் பேசப்பட்ட விவகாரங்களில் ஒன்று கிளாண்டர்ஸ் பாக்டீரியா தொற்று. சென்னையில் ஒரு ஜாய்ரைட் குதிரை இந்தத் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இந்தத் தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவு என்றாலும், குதிரைகள், கோவேறு கழுதைகள் போன்ற விலங்குகளிடையே வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த நோயைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்புடைய விலங்குகளைத் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யவும், சுற்றுலா மற்றும் ஜாய்ரைட் இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தினர். மேலும், மருந்தகங்கள்நாளை முழு அடைப்பு செய்யப்படுவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நாடுமுழுவதும் உள்ள மருந்தக உரிமையாளர்கள், ஒழுங்குபடுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனை மற்றும் பிற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் சிரமங்களை முதலமைச்சர் விஜய் கவனத்தில் எடுத்துக்கொண்டார். மக்களின் அத்தியாவசிய மருந்துத் தேவை பாதிக்கப்படாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அவசர மருந்துகளுக்கான தனி ஏற்பாடுகள் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான ஸ்டாக் இருப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தில் களமிறங்கிய 65 Anti-Drug Teams! முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளான்..!!
மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் பணி நியமனம் குறித்தும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. தற்போது பல அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவை தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: திருநங்கைகளின் உரிமைக்குரல்..! செவி சாய்த்த முதல்வர் விஜய்..! முக்கிய ஆலோசனை..!