×
 
☰

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம்..! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை..!!

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 48 மணி நேர அவகாசம் அளித்துள்ளார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்குவோம் என்றும் திப்கே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திப்கே, “ஞானேஷ் குமார் நாட்டின் மிகப்பெரிய துரோகி. அவர் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 48 மணி நேரத்திற்குள் பதவி விலகாவிட்டால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாடு முழுவதும் போராட்டத்தைத் தொடங்கும். அவர் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று கூறினார்.

இந்தக் கோரிக்கைக்குக் காரணம், தேர்தல் ஆணையத்தின் உள்ளே நடைபெற்று வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து வெளியான அறிக்கைகள். வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் போது, மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் பல முறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது முடிவுகளைத் திணித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதையும் படிங்க: இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்..!! தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்.!

இதன் காரணமாக லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளதாகவும் திப்கே குற்றம் சாட்டினார்.“முன்பு மக்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். இப்போது அரசாங்கம் யார் வாக்களிக்கலாம், யார் வாக்களிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது. இதுதான் ஜனநாயகமா?” என்று கேள்வி எழுப்பிய திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பதால் இந்தியாவின் தேர்தல் முறைமை நம்பகத்தன்மையை இழந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share