×
 

மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஷாக் கொடுத்த கேஸ் சிலிண்டர் விலை... எவ்வளவு உயர்வு?

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று முதல் ரூபாய் 10.50 காசுகள் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

நாடு முழுவதும் இந்த மாதத்திற்கான வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அந்த வகையில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் சென்னையில் எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் ரூபாய் 957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் 200 குறைக்கப்பட்டு, ரூபாய் 2,906-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது செப்டம்பர் மாத தொடக்கத்தில் ரூபாய் 10.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூபாய் 2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. ஜூலை மாதத்தில் ரூபாய் 177 குறைக்கப்பட்டு ரூபாய் 3,106-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் ரூபாய் 46 உயர்த்தப்பட்டு ரூபாய் 3,283-ஆக இருந்தது. அதற்கு முன்பு மே மாதத்தில் ஒரே மாதத்தில் ரூபாய் 990.50 அளவுக்கு மிகப்பெரிய உயர்வு செய்யப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!

அதாவது, கடந்த சில மாதங்களில் வணிக சிலிண்டர் விலை ஒருபுறம் உயர்த்தப்பட்டும், மறுபுறம் தொடர்ந்து குறைக்கப்பட்டும் வந்துள்ளது. தற்போது செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ரூபாய் 10.50 உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், நாட்டின் முக்கிய நகரங்களிலும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ரூபாய் 2,748.50-க்கும், மும்பையில் ரூபாய் 2,701-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, வீட்டு உபயோக சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு முக்கியமான மற்றொரு விஷயமும் உள்ளது. LPG நுகர்வோர் தங்களுடைய e-KYC விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமாகவோ முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தன. இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதனால், இன்று முதல் e-KYC செய்யாத நுகர்வோருக்கு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சில விநியோகஸ்தர்கள் சிலிண்டர் வழங்குவதில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இதுவரை e-KYC விவரங்களை முழுமையாகப் பதிவு செய்யாத பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் e-KYC பதிவு செய்வதற்கான காலக்கெடுவை இரண்டு முறை நீட்டித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சிறப்பு முகாம் நடத்தி அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share