×
 

கர்நாடகா, தெலுங்கானா. ம.பி-யில் வகுப்புவாத மோதல்!! பதற்றத்தை தணிக்க குவிக்கப்பட்டும் போலீசார்!

கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வகுப்புவாத மோதல் அரங்கேறியதையடுத்து, அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாநிலங்களில் ஒரே நேரத்தில் வகுப்புவாத மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் சிவாஜி ஜெயந்தி ஊர்வலம், ரம்ஜான் தொழுகை, துர்கா கோவில் ஆரத்தி ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெற்றதால் பதற்றம் ஏற்பட்டது. உயிரிழப்பு இல்லை என்றாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பாஹல்கோட்டில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊர்வலம் மசூதி வழியாக சென்றபோது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு கல் மாவட்ட எஸ்பி சித்தார்த் கோயல் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. 

அதிக சத்த இசை (டிஜே) காரணமாக முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் உச்சத்துக்கு சென்றது. எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். பாஹல்கோட் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பு வீடியோ...!! காங்கிரஸ், பாஜகவினரை விரட்டி விரட்டி வெளுத்த போலீசார்... கற்கள், காலணிகளை வீசித் தாக்குதல்...!!

தெலுங்கானாவின் ஹைதராபாத் ஆம்பர்பேட்டையில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் சென்றது. ஹிந்து அமைப்பினர் அதிக சத்த இசையுடன் சென்றதால் முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 

இது வாக்குவாதமாகி கைக்கலப்பாக மாறியது. போலீசார் உடனடியாக தலையிட்டு மோதலை தடுத்தனர். யாருக்கும் காயம் இல்லை, சொத்து சேதமும் இல்லை. ஆனால் பதற்றத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் ஜபல்பூரின் சிஹோரா பகுதியில் துர்கா கோவில் வளாகத்தில் மர்ம நபர்கள் சேதம் விளைவித்தனர். நேற்று முன்தினம் மாலை கோவிலில் ஆரத்தி நடைபெற்ற அதே நேரத்தில் அருகே உள்ள மசூதியில் பிரார்த்தனை நடந்தது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில் மற்றும் மசூதி அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூன்று மாநிலங்களிலும் சமூக ஐக்கியத்தை பாதிக்கும் இந்த சம்பவங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும், பதற்றம் தொடர்கிறது. அரசியல் கட்சிகள் அமைதி கோரியுள்ளன. தேர்தல் காலம் நெருங்கும் நிலையில் இத்தகைய சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்துக்கு பெரும் சவாலாக உள்ளன. 

இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்!! பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவு!! திருப்பூரில் வங்கதேசத்தினர் 6 பேர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share