×
 

சொல்லி அடிக்கும் ராகுல்... எப்படி வாக்கு திருடுறாங்க தெரியுமா? விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

வாக்குகள் எப்படி திருடப்படுகிறது என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

வாக்கு திருட்டு பிரச்சனை இந்தியாவில் வீரியம் எடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டை வருகிறார். பல்வேறு ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்ட நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. வேண்டுமென்றே ராகுல் காந்தி புகார் கூறுவதாகவும் வாக்கு திருட்டு நடக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில், வாக்குத்திருட்டு எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. போலி இணைய முகவரியை உருவாக்கி அதன் மூலம் வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 5 படிநிலைகளில் வாக்குகள் நீக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் நீக்கத்திற்காக தனியாக மென்பொருளை உருவாக்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை இணையதளம் மூலம் திருடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தி உள்ளது. உங்களுக்கே தெரியாமல் உங்களது எண்ணை மாற்ற முடியும் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் ஒருவரின் எண்ணை அவரது அனுமதியின்றி மாற்றி உள்ளோம் என்றும் வாக்கு திருட்டு செயல்முறை தொடர்பாக பல்வேறு விளக்கங்களை காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது...திமுக கூடாரம் காலி... ரவுண்டு கட்டிய இபிஎஸ்...!

தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவே வாக்குத்திருட்டு நடப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் இருந்து வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். ஒருவரின் வாக்காளர் எண் தெரிந்தாலே அவரது வாக்குகளை நீக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கேட்ட காங்கிரஸ்... கே.எஸ்.அழகிரிக்கு பதிலடி கொடுத்த திமுக அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share