×
 

சாதிவாரி கணக்கெடுப்பின் தாக்கம் என்ன? இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு குறித்து விவாதிக்க இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

பல்வேறு அரசியல் கட்சியினர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி சாதி மாறி கணக்கெடுப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.. இந்த நிலையில் ஒருவழியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.. 

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே சி வேணுகோபால், உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்க.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஏற்கனவே கடந்த 24 ஆம் தேதி காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸின் பாக்., விசுவாசிகளே... இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள்... பவன் கல்யாண் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share