×
 

தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவராக, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுகிறார். மேலும், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் விரைவில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், கட்சியின் அடுத்த கட்ட தலைமையைப் பற்றிய ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல்களை எதிர்கொள்ளும் முன்பாக கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸின் இடைக்கால தலைவராக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தாலும், அனுபவம் மற்றும் கட்சிக்குள் உள்ள செல்வாக்கு காரணமாக அசோக் கெலாட்டுக்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்: காங்கிரஸ் கட்சியின் 'மக்கள் சேவகன்' புதிய திட்டம் துவக்கம்!

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தமிழகம் உட்பட ஆறு மாநில காங்கிரஸ் தலைவர்களையும் மாற்றும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியும் சூடுபிடித்துள்ளது. எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், பிரவின் சக்கரவர்த்தி மற்றும் முன்னாள் எம்.பி. செல்லகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் ஒருவருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுடன் பேசியிருப்பதாகவும், தனது கோரிக்கையை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த மாற்றங்கள் தேசிய அரசியலிலும் தமிழக அரசியலிலும் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

இதையும் படிங்க: திமுகவில் இணைந்தார் ஸ்ரீநிதி! கோவையில் தங்களை மேலும் பலப்படுத்தும் திமுகவின் மாஸ் மூவ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share