×
 

மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

செயின் பறிப்பு சம்பவம் குறித்து மயிலாடுதுறை எம்.பி சுதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

டெல்லியில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. ஆர். சுதாவுக்கு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், இப்போ எல்லாரையும் பேச வைச்சிருக்கு! இன்னிக்கு (ஆகஸ்ட் 4, 2025) காலை, சாணக்யபுரியில உள்ள தமிழ்நாடு இல்லத்துல தங்கியிருக்குற சுதா, நடைபயிற்சிக்கு போயிருக்கும்போது, ஒரு ஸ்கூட்டி மர்மநபர் அவரோட தங்கச் சங்கிலியை பறிச்சுட்டு ஓடியிருக்கான். இந்த சம்பவத்துல காயமடைஞ்ச சுதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி முறையிட்டுருக்காங்க..

இப்போ பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்துட்டு இருக்குறதால, சுதா டெல்லியில தமிழ்நாடு இல்லத்துல தங்கியிருக்கார். இன்னிக்கு காலை 6:15-6:20 மணி சுமாருக்கு, மற்றொரு ராஜ்யசபா எம்.பி. ராஜாதி சல்மாவோட சாணக்யபுரியில உள்ள போலந்து தூதரகம் அருகே நடைபயிற்சி போயிருக்கார்.

அப்போ, முழு ஹெல்மெட் போட்ட ஒரு ஆள், ஸ்கூட்டியில மெதுவா வந்து, சுதாவோட 4 சவரனுக்கு மேல எடையுள்ள தங்கச் சங்கிலியை இழுத்து பறிச்சுட்டு தூளி கிளப்பி ஓடியிருக்கான். இந்த இழுப்புல சுதாவுக்கு கழுத்துல காயம் ஆயிடுச்சு, சுடிதாரும் கிழிஞ்சு போச்சு. “நான் தடுமாறி விழாம எப்படியோ தப்பிச்சேன், ரெண்டு பேரும் உதவிக்கு கத்தினோம்”னு சுதா தன்னோட கடிதத்துல சொல்லியிருக்கார்.

இதையும் படிங்க: அனல் பறக்க காத்திருக்கும் பார்லிமென்ட்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி, அமித் ஷா உரை..!

சாணக்யபுரி, டெல்லியோட உயர் பாதுகாப்பு மண்டலம். அங்க எம்பஸிகள், விஐபி இல்லங்கள் நிறைய இருக்கு. “இப்படி ஒரு இடத்துல, ஒரு எம்.பி. மேல இப்படி ஒரு தாக்குதல் நடக்குதுன்னா, பெண்கள் எங்க பாதுகாப்பா இருக்க முடியும்?”னு சுதா அமித்ஷாவுக்கு எழுதின கடிதத்துல கேள்வி எழுப்பியிருக்கார். “நான் மனசு உடைஞ்சு போயிருக்கேன், கழுத்துல காயம், சங்கிலி போயிடுச்சு. 

இந்த குற்றவாளியை உடனே கண்டுபிடிச்சு கைது பண்ணுங்க”னு கோரிக்கை வைச்சிருக்கார். இந்த சம்பவத்துக்கு அப்புறம், சுதா சாணக்யபுரி காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்கார். டெல்லி போலீஸ், FIR பதிவு பண்ணி, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குற்றவாளியை பிடிக்க பல டீம்களை அனுப்பியிருக்கு. தமிழ்நாடு இல்லம் பகுதியில பாதுகாப்பு இப்போ இன்னும் இறுக்கமாக்கப்பட்டிருக்கு.

இந்த சம்பவம், டெல்லியோட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேல பெரிய கேள்வியை எழுப்புது. “ஒரு எம்.பி-க்கே இந்த நிலைமைன்னா, சாதாரண பெண்கள் எப்படி பாதுகாப்பா உணர முடியும்?”னு சுதா கேள்வி கேட்டிருக்கார். இந்த விவகாரத்துக்கு பாஜகவோ, “இது தனிப்பட்ட சம்பவம், இதை அரசியலாக்க வேண்டாம்”னு சொல்லுது. 

ஆனா, காங்கிரஸ் தலைவர்கள், “டெல்லியில பாதுகாப்பு கேள்விக்குறியாகுது”னு குற்றம்சாட்டுறாங்க. சுதாவோட புகார் மேல போலீஸ் விசாரணை தீவிரமா நடந்துட்டு இருக்கு. சிசிடிவி காட்சிகள், சாட்சிகள் மூலமா குற்றவாளியை பிடிக்க முடியுமானு பார்க்கணும்.

இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share