×
 

திமுக கூட ரொம்ப உறவாடாதீங்க! காங்., மாவட்ட தலைவர்களுக்கு மேலிடம் போட்ட வாய்மொழி உத்தரவு!

தமிழக காங்.,கில், வரும் சட்டசபை தேர்தலுக்காக 'தி.மு.க.,வுடன் கூட்டணி' என ஒரு கோஷ்டியும், 'த.வெ.க.,வுடன் கூட்டணி' என மற்றொரு கோஷ்டியும் கூறி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்ள கூட்டணி குழப்பம் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பிரிவினர் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக / TVK) உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியின் 71 மாவட்டங்களுக்கும் சமீபத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மாவட்டங்களில், இந்த புதிய தலைவர்கள் ஆளும் திமுக அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். ஆசி பெறுவது, உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வது உள்ளிட்டவற்றுக்காக அவர்கள் திமுக தரப்பை சந்திக்க ஆர்வம் காட்டியுள்ளனர். 

ஆனால், கட்சி தலைமை இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. 'புதிய மாவட்டத் தலைவர்கள் யாரும் கூட்டணி கட்சித் தலைவர்களை (குறிப்பாக திமுகவை) சந்திக்கக் கூடாது' என்ற வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: காங்கிரஸை உடைக்க விஜய் திட்டம்!! கதறும் கதர் வேட்டிகள்! தவெகவுக்கு தாவ தயாராகும் முக்கிய புள்ளிகள்!

இதனால், புதிய மாவட்டத் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் விளக்கமளித்தபோது, "ராகுல் காந்தி பிப்ரவரி 14ஆம் தேதி கட்சி நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வர உள்ளார். அவர் வந்து சென்ற பிறகு கூட்டணி முடிவு இறுதியாகிவிடும். அதுவரை திமுகவுடன் யாரும் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம் என்பதால்தான் இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது" என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைகளின்படி, திமுக கூட்டணியை தொடர்வதே பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக இருந்தாலும், சிலர் தவெகவுடன் இணைந்தால் அதிக தொகுதிகள், அதிகாரப் பகிர்வு (துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்டவை) கிடைக்கும் என்று வாதிட்டு வருகின்றனர். 

ஆனால், தேசிய தலைமை (மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி) திமுக கூட்டணியை உறுதிப்படுத்தி, கூட்டணி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவதையும் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக, புதிய மாவட்டத் தலைவர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை கவனமாக திட்டமிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் சென்னை வருகைக்கு பிறகு கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமாக இருந்தாலும், தவெகவின் எழுச்சி காரணமாக காங்கிரஸில் உள்ள பிரிவுகள் தேர்தல் உத்திகளை பாதிக்குமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ஆசை காட்டும் திமுக!! அசாம் தேர்தல் செலவை ஏற்பதாக பேரம்!! கூட்டணியை காப்பாற்ற தகிடுதத்தோம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share