×
 
☰

ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்..! கூட்டுறவு அங்காடிகளில் வழங்க முடிவு..! தமிழக அரசு அறிவிப்பு.!

கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில் சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஏற்கனவே ரேசன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் கூட்டுறவு அங்காடிகள் வழியாக வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் நோக்கில் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.200க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், சந்தை விலையை விட குறைந்த விலையில் இந்த அத்தியாவசிய மளிகைப் பொருட்களை மக்கள் வாங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தத் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நகரத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் வழியாக பொதுமக்கள் இந்தத் தொகுப்பை எளிதாகப் பெற முடியும்.

இதையும் படிங்க: தவெக உட்கட்சி பூசலை சமாளிக்க மிட் நைட் மீட்டிங் வைத்த ஆனந்த்! தவெக நிர்வாகிகளுக்கு அளித்த உத்தரவாதம்!

தமிழக அரசு தொடர்ந்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரிசி, பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த மளிகைத் தொகுப்புத் திட்டம், பண்டிகைக் காலத்தில் குடும்பங்களின் செலவைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதையும் படிங்க: கடனில் பொதுத் துறை.! படுகுழியில் தமிழ்நாடு.! பதில் சொல்லுங்க CM.! வேல்முருகன் கேள்வி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share