×
 

“குருமூர்த்தி ஒரு அரசியல் வியாபாரி”... என்னை பற்றி விமர்சிக்க தகுதியில்லை - சி.வி.சண்முகம் அட்டாக்...!

குருமூர்த்தி ஒரு அரசியல் வியாபாரி இவருக்கெல்லாம் அதிமுக வெற்றி பெறனும் என்ற எண்ணமில்லை எப்படியாவது அதிமுக, திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சு

விழுப்புரம் மாவட்டம்  மேல்காரணையில் அதிமுக சார்பில்   தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ,திமுக அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தேர்தல் வருகிறது, மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு திமுக அரசு ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்து பயனடைந்துள்ளதாக கூற முடியுமா?. எங்க போனாலும் ஆயிரம் கொடுத்தோம், இலவச பேருந்தை கொடுத்தோம் என்பார்கள். பெண்களை கேவலப்படுத்தி அவமானபடுத்தும் அரசாக உள்ளது.

இலவசம் என கூறிவிட்டு மறைமுகமாக பேருந்து கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளதாக குற்றம்சாட்டினார். மழையில் கூட உட்காந்துவிடலாம் ஆனால் பேருந்துவில் உட்கார முடியாது. அந்த அளவிற்கு அரசு பேருந்துகள்  ஓட்டை உடைச்சல் பேருந்தாக உள்ளதாகவும், ஆண்டுக்கு மூவாயிரம் பேருந்து வாங்குவதாக தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால் பதினைந்தாயிரம் பேருந்துகள் வந்திருக்க வேண்டும். பேருந்துவிற்குபிங்க் லிப்ஸ்டிக் போட்டுள்ளார்கள், இது போன்ற எண்ணம் கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டும் தான் வரும் என விமர்சனம் செய்தார்.

நான்கரை ஆண்டுகள் மக்களை பற்றி சிந்திக்காத திமுக அரசு உங்களுடன் ஸ்டாலின் என்கிறார்கள், மக்களின் கஷ்டத்தை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி 1500 ரூபாயும் கொடுப்போம் அல்லது இரண்டாயிரமும் கொடுப்போம் அதுவும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனே வழங்குவோம் என தெரிவிப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: குலசை திருவிழா... வேடம் போட போறீங்களா? கோவில் நிர்வாகம் கொடுத்த முக்கிய அறிவுரைகள்...!

பன்னீர் செல்வத்தை விமர்சித்த சி வி சண்முகம் நான் ஏன் அவர் வீட்டு வாசலில் போய் நின்றேனா என ஒருத்தர் கூறுகிறார். அவர் என் வீட்டு வாசலில் நிற்க மாட்டார் ,கலைஞர் வீடு, ஸ்டாலின் வீடு கோபாலாபுரம் தான் தெரியும் அவர்கள் வீட்டு வாசலில் தான் போய் நிற்பார், பதவி கொடுத்தது   அதிமுக போவது என்பது ஸ்டாலின் வீடு அதிமுக நல்லா இருக்கனும் நினைப்பவர்களா இவர்கள், அதிமுக அழிய வேண்டும் என நினைப்பவர்கள்.

குரு மூர்த்தி என ஒருவர் இருக்கிறார் அரசியல் வியாபாரி இவருக்கெல்லாம் அதிமுக வெற்றி பெறனும் என்ற எண்ணமில்லை எப்படியாவது அதிமுக, திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் தைரியத்தை பற்றி பேசுவதற்கு அருகதையும் தைரியும் கிடையாது என் கூறினார்.

விலைவாசி குறைக்க மோடி அரசு வரி சீர்த்திருத்தைத்தை கொண்டு வந்துள்ளதாகவும், கல்வி, 33 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி இல்லை. பால் பொருட்களுக்கு வரி இல்லை. காய்கறிகளுக்கு வரி இல்லை. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு 18 சதவீதமாக இருந்த வரி ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. இதனை செய்தது அதிமுக, பாஜக கூட்டணி என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... சுற்றுலா பயணிகளுக்கு வெளியானது அதிரடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share