×
 
☰

திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

வங்கக்கடலில் உருவான அருணா புயல், ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் கரையைக் கடந்து வருகிறது.

வங்கக்கடலின் மேற்கு மத்தியப் பகுதியில், ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு அப்பால் தொடர்ந்து நிலைகொண்டிருந்த அர்னாப் எனும் மிகத் தீவிரச் சூறாவளிப் புயல், கடந்த மூன்று மணி நேரத்தில் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இதற்கு முந்தைய நேரங்களில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில்கூட நகர்ந்த இந்தப் புயலின் வேகம் தற்போது குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு வெளியான தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரத்திற்குக் கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், ஏனாமிற்குத் தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிற்குத் தெற்கு – தென்மேற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்குக் கிழக்கு – வடகிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்குக் கிழக்கு – வடகிழக்கே 170 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தப் புயல் நிலைகொண்டிருந்தது.

இதையும் படிங்க: ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஏனாமிற்குத் தெற்கே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மிகத் தீவிரச் சூறாவளிப் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அர்னாப் புயல் ஏற்கெனவே நிலப்பகுதியைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், புயலின் மையத்தைச் சுற்றியுள்ள அடர்ந்த மேகக் கூட்டத்தின் ஒரு பகுதி நிலப்பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் கண் பகுதியும் நிலப்பகுதிக்குள் நுழைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலின் மையம் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், கரையைக் கடக்கும் நிகழ்வு அடுத்த மூன்று மணி நேரத்திற்குத் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாலை 2.30 மணிக்கு வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் புயல் முழுமையாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலின் தாக்கத்தால் நேற்று முதல் இன்று அதிகாலை வரை ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. தற்போது புயலின் நகரும் வேகம் குறைந்திருந்தாலும், அது வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் நிகழ்வின்போது மணிக்கு 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் அதன் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பீமாவரம் பகுதிகளில் மணிக்கு 93 கிலோமீட்டர் வேகத்திலும், விசாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும், கங்காவரம் பகுதியில் மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றின் தாக்கம் காணப்படுகிறது.

நேற்று நள்ளிரவிலும், இரவு நேரத்திலும் சென்னை எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது. இந்தச் சூறாவளிப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய பிறகு, காற்றின் வேகமும் கடலின் கொந்தளிப்பும் அதிகரித்துள்ளன.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை மற்றும் வடசென்னையின் கடலோரப் பகுதிகளிலேயே இந்த அளவுக்குத் தாக்கம் காணப்படுகிறது. அப்படியிருக்கும்போது, ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் மேலும் அதிகமாக உள்ளது.

குறிப்பாக, புயலின் கண் பகுதி நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளும் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் தீவிர புயலாக மாறிய 'அர்னாப்': மணிக்கு 140 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று  எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share