×
 

கவுண்டவுன் ஸ்டார்ட் - இன்னும் 3 நாள் தான் - ஆதார் - பான் கார்டு இணைக்க டிச.31 கடைசி தேதி!

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆதார் கார்டுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், பொதுமக்கள் அனைவரும் இந்த முக்கியமான பணியை விரைந்து முடிக்க வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைக்கத் தவறினால், நிதிப் பரிவர்த்தனைகளுக்கு அத்தியாவசியமான உங்களது பான் அட்டை செயலற்றதாக மாறிவிடும் என்றும், பழைய அட்டைதாரர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மட்டுமே இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது நிதித் தரவுகளை முறைப்படுத்தும் விதமாக, ஆதார் அட்டையுடன் பான் (PAN) எண்ணை இணைக்க வேண்டும் என்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான இறுதி காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில், இதுவரை இணைக்காதவர்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இந்த நடைமுறையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்திற்கு இனி பான் கார்டு செல்லாது..!! UIDAI அறிவிப்பு..!!

இந்தக் காலக்கெடுவிற்குள் இணைக்கத் தவறினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டிசம்பர் 31-க்குப் பிறகு ஆதார் - பான் இணைக்கப்படாத அட்டைகள் அனைத்தும் 'செயல்படாதவை' (Inoperative) என அறிவிக்கப்படும். இதனால் வங்கி கணக்கு தொடங்குதல், வருமான வரி தாக்கல் செய்தல் மற்றும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்து இதுவரை இணைக்காதவர்கள், தற்போது 1,000 ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்தியே இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், புதிய அட்டைதாரர்களுக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது. அதாவது, 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு புதிய பான் அட்டை வாங்கியவர்கள், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி இலவசமாகவே தங்களது ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம். கடைசி நேர இணையதள நெருக்கடியைத் தவிர்க்க, பொதுமக்கள் இப்போதே இந்த இணைப்புப் பணியை முடிக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். டிசம்பர் 31-க்குப் பிறகு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

இதையும் படிங்க: 2026-தேர்தல் வியூகம்: டிசம்பர் 31-ல் எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்! மாசெக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share