×
 

"தூக்கு தண்டனை"...! பெற்ற மகளையே வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தை... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!

நெல்லையில் பெற்ற 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தைக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 7 மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளியான ஒருவர் தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த சிறுமி ஏழு மாதம் கர்ப்பமான நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில் நாங்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பிரசன்ன குமார் என்பவர் தலைமையிலான குழுவினர் வழக்கை மிக தீவிரமாக கையாண்டனர். இதன் தொடர்ச்சியாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குறுகிய காலத்திலேயே ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி நீதிமன்றத்தில் தீர்க்கமாக சமர்ப்பித்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வலுவான வாதங்களை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் 7 மாத கால தொடர் விசாரணைக்கு பிறகு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கி கொடூர செயலில் ஈடுபட்டு மன்னிக்க முடியாத குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகப்பெரிய சமூகத்தின் கொடூரம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மகளை கர்ப்பமாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதாகவும் அதிரடி தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் நடந்த ஏழு மாதங்களுக்குள்ளேயே குற்றவாளிக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரும் அளவுக்கு விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இது போன்ற கொடூர செயலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தண்டனையானது எச்சரிக்கையாக இருக்கும் என்று கருதுகின்றனர். 

இதையும் படிங்க: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! போலீஸ் தேடுவது தெரிந்தும் மோட்டார் அறையில்... கோவை பாலியல் வழக்கில் வெளிவரும் உண்மைகள்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share