பாலியல் குற்றச்சாட்டால் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்... ரீல்ஸ் பெண் தலைமறைவு.. தேடுதல் வேட்டை தீவிரம்..!
தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை எடுத்து வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவாகியுள்ளார்.
கேரள மாநிலம் கொழிக்கோட்டைச் சேர்ந்த 41 வயதான தீபக் என்பவர், சமூக வலைதளத்தில் வைரலான ஒரு வீடியோவால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.தீபக் கொழிக்கோட்டின் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளியன்று அவர் வேலை சம்பந்தமாக கண்ணூர் நோக்கி பேருந்தில் பயணித்தார்.
அப்போது, பயணியான சிம்ஜிதா முஸ்தபா என்ற பெண், தீபக் தன்னை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாகக் குற்றம்சாட்டி ஒரு சிறு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. இதனால் தீபக் மீது கடுமையான ஆன்லைன் தாக்குதல்கள், அவதூறுகள், தரப்பு விமர்சனங்கள் எழுந்தன. வீடியோ வெளியான சில நாட்களிலேயே தீபக் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவை பார்வையிட்ட பலரும் தற்செயலாக நடந்த செயல் என்பது போல தான் தோன்றுகிறது என்றும் வீடியோ ஸ்லோ செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும் ரீல்ஸ் மோகத்திற்காக அந்த பெண் இவ்வாறு செய்திருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்பாவி ஒருவரின் உயிர் போக காரணமான அந்த பெண் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் சம்பந்தப்பட்ட பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தீபக் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..!
தவறாக சித்தரித்து மரணத்துக்கு காரணமான அப்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டன கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தீபக்கை தவறாக சித்தரித்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட அந்தப் பெண் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமறைவாக உள்ள அப்பெண்ணை காவல்துறை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளா வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! எப்போ..?? எதுக்கு தெரியுமா..??