நடுங்க வைக்கும் டெல்லி கார் குண்டுவெடிப்பு...! உமரின் தாய், சகோதரர்கள் அதிரடி கைது...!
டெல்லி குண்டு விடுப்பில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் மருத்துவர் உமர் தாய் மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டில் பயங்கரவாத சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்த பலர் கைது செய்யப்பட்டு, அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹரியானாவில் அதிக அளவு ஆர்.டி.எக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இருப்பினும், இது நடந்த சில மணி நேரங்களுக்குள் தேசிய தலைநகரில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்தது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தில் ஒரு காரில் வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அருகிலுள்ள கடைகளும் குண்டுவெடிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வெடிப்பில் அங்கிருந்த சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காரை ஒட்டி வந்த உமர் நபி என்பவர் காலை 8 மணி அளவில் ஹரியானா வழியாக டெல்லிக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பகீர் காட்சிகள்...!! காலையிலேயே பயங்கரம்... வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள் ...!
தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த காரை ஓட்டி வந்த உமரின் புகைப்படம் வெளியானது. காரை ஓட்டி சென்றதாக கூறப்படும் மருத்துவர் உமர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மருத்துவர் உமரின் தாய் மற்றும் சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீரில் வைத்து கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் டு டெல்லி... செங்கோட்டை அருகே வெடித்த காரின் பகீர் பிண்ணனி ...!