×
 

அய்யய்யோ...மீண்டும் மீண்டுமா! டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா... எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?

தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே புரட்டி போட்ட கோவிட்-19 பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். முழு ஊரடங்கு இதுவரை கண்டிடாத அளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில், கொரோனா அலை ஓய்ந்தது. 

இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. நிதி பகிர்வு குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

இது தொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் பேசுகையில், டெல்லியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பயண விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதனிடைய நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 312 எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இப்படியொரு காட்டாச்சியை யாரும் பார்த்ததில்லை.. திமுக அரசை டாராக கிழித்த நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share