சாலையோரம் தூங்கிய சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை! டெல்லியில் அரங்கேறிய கொடூரம்!
டெல்லியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியின் மெஹ்ரொலி பகுதியில் வசித்து வந்த தம்பதியரின் 11 வயது மகள், குடும்பத்துடன் சாலையோரத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் சாலையோரத்தில் உறங்கிய நிலையில், இன்று அதிகாலை சிறுமி திடீரென காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்தனர்.
காலை எழுந்தபோது மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள தகவல்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதையும் படிங்க: டெல்லியிலிருந்து திரும்பினார் முதல்வர் விஜய் - தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்ததாக பெருமிதம்!
விசாரணையின் போது, சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை அதிகாலை நேரத்தில் 30 வயதுடைய கார் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், சிறுமியை ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சாலையோரங்களில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!