×
 

சர்ரென உயரும் டெல்லி காற்று மாசு... திணறும் தலைநகரம்... பெட்ரோலுக்கு கட்டுப்பாடு விதிப்பு...!

காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் பெட்ரோலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழை உள்ளிட்ட முயற்சிகளை கூட மேற்கொண்டு வருகிறது. கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பட்டாசு தயாரிக்கவும், பட்டாசுகளை வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது பெட்ரோலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று மாசால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். இது போன்ற சூழல் மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி இருக்கிறது. பொதுவாக காற்று தரக் குறியீடு 0- 50க்கு இடைப்பட்ட அளவு இருப்பது சுகாதாரமான சூழலுக்கான அறிகுறி. 51 இல் இருந்து 100க்கு இடைப்பட்ட அளவு திருப்திகரமானது.

அதில் 101 இருந்து 200 அளவானது மிதமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதிலும் 201 இருந்து 300க்கும் இடையே இருந்தால் மோசமான காற்று தர குறியீடு என்று அறியப்படுகிறது. 301- 400 மிகவும் மோசமான காற்று மாசு குறியீடு. தலைநகர் டெல்லியை பொருத்தவரை 428க்கும் அதிகமான அளவை காற்று தரக்குறியீடு எட்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது டெல்லியில் உள்ள காற்று மாசு அளவை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான காற்று மாசுவால் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: அமித்ஷாவுடன் பேசியது என்ன? இதுதான் நடந்துச்சு... நயினார் ஓபன் டாக்...!

இதன் காரணமாக டெல்லியில் காற்று மாசுவை குறைக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த பலவித முயற்சிகளை மாநில அரசு எடுத்துள்ளது. P.U.C. சான்றிதழ் இல்லையென்றால் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: அமித்ஷாவை சந்திக்கும் நயினார்... லிஸ்ட் போட்டாச்சு... இபிஎஸ்- யிடம் பேசியதை விளக்க போராராம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share