×
 

கார் குண்டுவெடிப்பு பயங்கரம்... அதிர வைக்கும் நிகழ்வு... கதி கலங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!

டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு தொடர்ந்து ஆள்பட்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல்கள், 2019 புல்வாமா வெடிப்பு, 2025 நவம்பர் டெல்லி கார் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை சோதித்தன. இத்தகைய சம்பவங்களைத் தடுக்க, இந்திய அரசு பல்வேறு சட்டங்கள், அமைப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. 

குறிப்பாக, செங்கோட்டையின் கேட் எண் 1 இல் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை 6.45 மணி அளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் அருகிலுள்ள 8 கார்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. 

இந்த சம்பவத்தால் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த காரை ஓட்டி வந்த உமர் நபி என்பவரது புகைப்படம் வெளியான நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரர்களை புல்வாமா பகுதியில் இருந்து கைது செய்தனர். மேலும், முசமில் சகிர் என்பவரையும் கைது செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த சதி? நாங்கதான் செஞ்சோம்... பரபரப்பு வாக்குமூலம்...!

தற்போது, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிக்னலில் கார்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது மருத்துவர் உமர் ஓட்டி வந்ததாக கூறப்படும் கார் வெடித்து சிதறி உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் கார் வெடித்து சிதறியதால் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தணியாத பதற்றம்... பாகிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு..! பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share