வெடிக்கும் போராட்டம்.. டெல்லியில் Ex. முதல்வர்கள் பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் கைது..! பரபரப்பு..!!
டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் இன்று காலை நடந்த ஒரு அரசியல் நிகழ்வு நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு விரிவான மறுஆய்வு (எஸ்ஐஆர்) நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவிருந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மற்றும் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பெ.சண்முகம், பாலபாரதி, வாசுகி மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கருமலையான் உள்ளிட்டோரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஜந்தர் மந்தர் அருகே நடைபெறவிருந்த இந்த போராட்டத்திற்கு செல்லும் வழியில் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த போராட்டம் காக்ட்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) என்ற அமைப்பின் அழைப்பில் நடைபெறவிருந்தது. வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், பல கோடி மக்கள் வாக்குரிமை இழந்ததாகவும் குற்றம்சாட்டி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கெத்தாய் இறக்கப்பட்ட 40,000 போலீஸ்... திரும்பிய திசையெல்லாம் கொத்து, கொத்தாய் கைது... திணறும் டெல்லி...!
டெல்லி காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களை தடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பேரிகேடுகள் அமைக்கப்பட்டு, கூடுதல் காவல் படைகள் நிறுத்தப்பட்டன.
இதையும் படிங்க: ஹை அலர்ட்டில் டெல்லி... தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சிகள்... இன்று காத்திருக்கும் அதிரடி சம்பவம்...!