×
 
☰

வியாபாரிகளுக்கு குட் நியூஸ் வருமா? இன்று கூடுகிறது 57வது ஜிஎஸ்டி கவுன்சில்..!!

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லியில் இன்று நடைபெறும் 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து வரி அமைப்பை மேலும் எளிமையாகவும் வணிக நட்புடனும் மாற்றுவதற்கான அடுத்த கட்ட சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டுள்ளது. முந்தைய கூட்டத்தில் வரி விகிதங்களை எளிமைப்படுத்திய பிறகு, இப்போது நிர்வாக நடைமுறைகள், இணக்கச் சுமை குறைப்பு மற்றும் வழக்குகளை குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

கூட்டத்தில் வரி முறை மற்றும் நிர்வாகத்தை எளிதாக்கும் பல்வேறு சீர்திருத்தங்கள் விவாதத்திற்கு வருகின்றன. பதிவு செயல்முறையை விரைவுபடுத்துவது, ரிட்டர்ன்கள் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவது, ரீஃபண்டுகளை விரைவாக வழங்குவது ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. குறிப்பாக ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் ரிட்டர்ன்களை எளிதாக்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. தற்போதுள்ள சிக்கலான நடைமுறைகளைக் குறைத்து, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு குறைந்தபட்ச ஆவணங்களுடன் இணக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகள் பரிசீலிக்கப்படுகின்றன.

இது வணிகர்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு செலுத்தும் காப்பீட்டு பிரீமியங்களுக்கு உள்ளீட்டு வரிச்சலுகை வழங்குவது குறித்தும் விவாதம் நடைபெறுகிறது. தற்போது சில சந்தர்ப்பங்களில் இந்தச் செலவுகளுக்கு உள்ளீட்டு வரிச்சலுகை கிடைக்காததால் வணிகங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதை நீக்கி, உண்மையான வணிகச் செலவுகளுக்கு வரிச்சலுகை கிடைக்கச் செய்வது, பணப்புழக்கத்தை மேம்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

மேலும், சப்ளையர் வரி செலுத்தாத காரணத்தால் வாங்குபவருக்கு உள்ளீட்டு வரிச்சலுகை மறுக்கப்படும் சூழலை மாற்றியமைக்கும் முன்மொழிவுகளும் உள்ளன. உண்மையான வாங்குபவர்கள் பாதுகாக்கப்படும் வகையில், ஆதாரங்களுடன் பரிவர்த்தனையை நிரூபித்தால் சலுகை தொடர அனுமதிக்கும் ஏற்பாடுகள் பரிசீலிக்கப்படுகின்றன.தேவையற்ற வழக்குகளைக் குறைப்பதும் இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஜிஎஸ்டி தொடர்பான சில குற்றங்களை குற்றமற்றதாக்குவது, கைது அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது, வழக்குத் தொடரும் வரம்புகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

 

இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share