×
 

கெஜ்ரிவால் நிம்மதிக்கு ஆப்பு வைக்கும் சிபிஐ!! டெல்லி மதுபான கொள்கை முறைகேடு!! மேல்முறையீடு ட்விஸ்ட்!

கெஜ்ரிவால் நிம்மதிக்கு ஆப்பு வைக்கும் சிபிஐ!! டெல்லி மதுபான கொள்கை முறைகேடு!! மேல்முறையீடு ட்விஸ்ட்!

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் ரேகா குப்தா தலைமையில் ஆட்சி நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் முக்கிய தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு தொடர்புடைய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2021-ல் ஆம் ஆத்மி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கெஜ்ரிவால் சுமார் 6 மாதங்களும், சிசோடியா சுமார் 2 ஆண்டுகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட விசாரணையின் முடிவில், கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட வழக்கில் சேர்க்கப்பட்ட 23 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆதாரங்கள் போதுமானதாக இல்லை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவில், "விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் தவறானது. நீதிபதி குறுகிய கால விசாரணை மட்டுமே நடத்தி, ஆதாரங்களை மேலோட்டமாக பார்த்துள்ளார். முக்கிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. சிபிஐ தீவிரமாக வழக்கை தொடர உறுதியெடுத்துள்ளது.

இதையும் படிங்க: செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்பு வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் திறக்கப்படும் முதல் நாளிலேயே இந்த முக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் நம்பிக்கையை அளித்தாலும், சிபிஐயின் மேல்முறையீடு காரணமாக வழக்கு இன்னும் நீடிக்கும் அறிகுறி தெரிகிறது.

கெஜ்ரிவால், சிசோடியா இருவரும் விடுதலையான பிறகு ஆம் ஆத்மி கட்சியினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சிபிஐயின் மேல்முறையீடு காரணமாக அரசியல் களத்தில் பதற்றம் நீடிக்கிறது. டெல்லி அரசியலில் இந்த வழக்கு இன்னும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share